செய்திகள்

அதிவேக இணையப் பாவனையில் பின் தங்கியுள்ள இந்தியா - கூகிள் இயக்குனர் முறைப்பாடு



கூகிள் நிறுவனத்தின் இயக்குனரான எரிக் ஷ்மிட் சமீபத்தில் நவீன யுகத்தின் இணையப் பாவனை வசதியை முழு வீச்சில் இந்தியா பயன்படுத்துவது இல்லை என முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் உலகில் உள்ள மற்றைய அனைத்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் இணையப் பாவனையில் முன்னேறி வரும் வேளையில் இந்தியா அதிவேக telecom வலையமைப்பில் அதிகம் முதலீடு செய்வதில் இன்னமும் ஆர்வம் காட்டாமல் உள்ளது என்றும் கூறினார்.
எரிக் ஷ்மிட் தனது இந்திய விஜயத்தின் போது மேற்குலக ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளிக்கையிலேயே இவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அதிவேக fibre இணைய தொடர்பாடலில் ஏனைய நாடுகளுக்கு இணையாக முதலீடு செய்வதில் இந்தியா ஆர்வம் காட்ட வேண்டிய தருணம் இது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்திய சனத்தொகை 1..2 பில்லியனாக இருக்கும் நிலையில் அங்கு இணையப் பாவனை வசதியுள்ளவர்கள் வெறுமனே 150 மில்லியன் பேர் தான் என்றும் கருத்துக் கணிப்புக் கூறுகின்றது. தகவல் தொழிநுட்பம் (IT) மற்றும் மென்பொருள் வடிவமைப்பு (Software) ஆகிய துறைகளில் இந்தியா மிகவும் முன்னேறியிருப்பதால் மேற்கொண்டு வறிய மக்களிடையே இணையம் சென்றடைவது குறித்து யோசிக்காமல் அரசியல் வாதிகள் திருப்திப் பட்டுக் கொள்வதும் இதற்குக் காரணமாகும்.
மேலும் நிபுணர்களின் கூற்றுப்படி இந்தியாவில் மாபைல் நெட்வேர்க் அதாவது கைத்தொலைபேசி அழைப்புக்கள் மிகவும் மலிந்து வந்துள்ளமை முக்கியமான வளர்ச்சி என்ற போதும் சில முக்கிய நகரங்களைத் தவிர்த்து பெரும்பாலான இடங்களில் அதிவேக இணையத் தொடர்பு வசதி இன்னமும் பரவவில்லை எனவும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
தற்போது நியூடெல்லியில் தங்கியிருக்கும் எரிக் ஷ்மிட் அங்கு முதன்முறையாக நடைபெறவுள்ள கூகிள் பிக் டென்ட் (Google Big Tent)ட் எனும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். கருத்துக் கணிப்புப் போன்ற இவ்வைபவத்தில் கொள்கை வடிவமைப்பாளர்களும் இணைய நிபுணர்களும் சந்தித்துக் கொள்ளவுள்ளனர்.
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...